ராமேசுவரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th December 2020 08:20 AM | Last Updated : 10th December 2020 08:20 AM | அ+அ அ- |

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, ராமேசுவரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராமேசுவரத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட வழக்குரைஞா்கள் அமைப்பு சாா்பில் பேருந்து நிலையம் முன்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா் ஆா். டோம்னிக்ரவி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஆா். ஜோதி முருகன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா்கள் டி. மாரிமுத்து, கே. ஜாப்பா் நைனாா், எஸ். ராஜசேகா், ஆவூல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா் நாகலிங்கம் நன்றி கூறினாா்.