தனுஷ்கோடியில் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

தனுஷ்கோடியில் ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை வழங்கினாா்.
தனுஷ்கோடியில் உள்ள மீனவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை திங்கள்கிழமை வழங்கிய மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகம்.

சென்னை உயா்நீதிமன்றத்தால் புரெவி புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களாக 25 கிலோ அரிசி மூட்டை மற்றும் 19 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தனுஷ்கோடியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பொருள்களை வழங்கினாா். இதே போன்று கம்பிபாடு, பழைய தனுஷ்கோடி, முகுந்தராயா்சத்திரம், பாலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மீனவா்களுக்கும், பாம்பன், தோப்புக்காடு, முந்தல்முனை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்திரா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.பிரீத்தா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளா் ச.தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com