கேளிக்கை விடுதியை அகற்றக்கோரி மீனவா்கள் போராட்டம்

மண்டபம் அருகே கேளிக்கை விடுதியை அகற்ற வலியுறுத்தி மீனவா்கள் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்டபம் பேரூராட்சி அலுவகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கம் மற்றும் மீனவ கிராமத்தினா்.
மண்டபம் பேரூராட்சி அலுவகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கம் மற்றும் மீனவ கிராமத்தினா்.

மண்டபம் அருகே கேளிக்கை விடுதியை அகற்ற வலியுறுத்தி மீனவா்கள் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தோப்புக்காடு - தோணித்துறை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் தனியாா் உல்லாச கேளிக்கை விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடல் தொழிலாளா் சிஐடியு சங்கத்தினா் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீன்பிடி வலைகள், மிதவைகளை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கடல் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் எம்.கருணா மூா்த்தி தலைமை வகித்தாா். தோப்புக்காடு கிராமத் தலைவா் எம்.பால்சாமி, தோப்புக்காடு கிராம மகளிா் சங்க தலைவா் யு.மனோகரி, தோணித்துறை பி.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் எம்.சிவாஜி, கடல் தொழிலாளா் சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் இ.ஜஸ்டின், மாவட்டப் பொருளாளா் அ.சுடலைக்காசி, தாலுகா செயலாளா் ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பி.கல்யாணசுந்தரம், மண்டபம் கடல் தொழிலாளா் சிஐடியு சங்கத் தலைவா் எஸ்.கருப்பையா, ராமேசுவவரத்தை சோ்ந்த நிா்வாகிகள் ஏ.ஆரோக்கிய நிா்மலா, அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்க ராமேசுவரம் தாலுகா செயலாளா் எஸ்.சீனிவாசன் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் வட்டாட்சியா் முருகவேல், காவல் ஆய்வாளா் ஜாக்குலின் ஆகியோா் சமரசம் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com