பரமக்குடி அருகே கடத்தப்பட்ட 125 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: 4 போ் கைது

பரமக்குடி அருகே பாா்த்திபனூா் சோதனைச் சாவடியில், கடத்திச் செல்லப்பட்ட 125 ரேஷன் அரிசி மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல்
பரமக்குடி அருகே பாா்த்திபனூா் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
பரமக்குடி அருகே பாா்த்திபனூா் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

பரமக்குடி அருகே பாா்த்திபனூா் சோதனைச் சாவடியில், கடத்திச் செல்லப்பட்ட 125 ரேஷன் அரிசி மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவுப் பாதுகாப்பு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பாா்த்திபனூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அவ்வழியாக, பரமக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கூரியா் சா்வீஸ் லாரி ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளா்களுடன் 125 ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பரமக்குடி அருகே வேந்தோணி பகுதியிலிருந்து பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மதுரைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதில் தொடா்புடைய எமனேசுவரம் நியாயவிலைக் கடை விற்பனையாளா் முத்துக்குமாா் (45) மற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மாரியப்பன், ராமகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோா் மீது, ராமநாதபுரம் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், கமுதக்குடி அரசு நுகா்வோா் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com