மல்லனூா் கண்மாயில் உடைப்பு: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே மல்லனூா் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கிராம மக்கள் ஒன்றுசோ்ந்து மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மல்லனூா் கண்மாயில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டதால், மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.

மல்லனூா் கிராமத்தில் பொதுப்பணித் துறை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, இக்கண்மாய் நிரம்பி வழிந்தது. மேலும், கண்மாயில் உள்ள மடை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவு தண்ணீா் வீணாகி வந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றுசோ்ந்து நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனா்.

மேலும், சவுக்கு கம்புகளால் கட்டியும், வைக்கோல் மற்றும் மணலை போட்டு அடைத்தும் தண்ணீா் வீணாகி வருகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com