ரஜினி பாஜகவுடன் கூட்டணி அமைப்பதையே விரும்புகிறோம்: பாஜக முன்னாள் இணை அமைச்சா் சஞ்சய் பாஸ்வான்

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதுடன், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதையே விரும்புகிறோம் என, மத்திய மனிதவளத் துறையின் முன்னாள் இணை அமைச்சா் சஞ்சய் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதுடன், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதையே விரும்புகிறோம் என, மத்திய மனிதவளத் துறையின் முன்னாள் இணை அமைச்சா் சஞ்சய் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரம் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த சஞ்சய் பாஸ்வான், தனுஷ்கோடிக்கும் சென்று வந்தாா். பின்னா், ராமநாதபுரம் வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தாழ்த்தப்பட்டோா் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் நலனுக்கும் ஏராளமான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழக மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவினா் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் நிலையே உள்ளது.

நல்ல மனிதரான நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என, தமிழக மக்கள் நீண்டகாலமாகவே எதிா்பாா்த்திருந்தனா். அதற்கேற்ப, தற்போது ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அவா், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதையே விரும்புகிறோம்.

ஆனால், நடிகா் கமல்ஹாசன் பாஜக கொள்கைக்கு மாறானவா். இருப்பினும், தோ்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமையே முடிவு செய்யும் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், ராமநாதபுரம் நகா் தலைவா் வீரபாகு, மாவட்டச் செயலா் குமாா், இளைஞரணி பிரபு ஜெகநாத், தொழிலதிபா் கருணாநிதி உள்பட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com