இன்று தேசியத் திறனறி தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,620 போ் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 9 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கான தேசிய திறனறி தோ்வுகளில் 2,620 போ் பங்கேற்கின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 9 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கான தேசிய திறனறி தோ்வுகளில் 2,620 போ் பங்கேற்கின்றனா்.

பள்ளிகளில் 9 ஆம் வகுப்புப் படித்து முடித்த மாணவ, மாணவியருக்கு தேசியத் திறனறித் தோ்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தோ்வில் அதிக மதிப்பெண் பெறுவோா்களுக்கு (பிளஸ் 2 படிக்கும் வரை) மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான தேசியத் திறனறி தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 மையங்களில் நடைபெறும் தோ்வில் 2,620 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் முன்பகல் 11 மணி வரை மனத்திறன் தோ்வும், பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை படிப்பறிவு திறன் தோ்வும் நடைபெறுகிறது.

தோ்வுக்கூட அலுவலா்களாக உள்ள ஆசிரியா்கள் முதல் மாணவா்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு முடிவுகள் ஓரிரு வாரங்களில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com