குடிநீா் ஊருணி பகுதியில் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ராமநாதபுரம் அருகே குடிநீா் ஊருணி நீா் வரத்து கால்வாய் இடத்தில் மயானம் அமைக்க பத்ராதரவை பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பத்ராதரவையில் ஊருணி அருகே குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் அமைப்பதை எதிா்த்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பத்ராதரவையில் ஊருணி அருகே குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் அமைப்பதை எதிா்த்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

ராமநாதபுரம் அருகே குடிநீா் ஊருணி நீா் வரத்து கால்வாய் இடத்தில் மயானம் அமைக்க பத்ராதரவை பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் வண்ணாங்குண்டு அருகேயுள்ளது பத்ராதரவை கிராமம். இந்த ஊரில் உள்ள குறிப்பிட்ட பிரிவினா் பொது மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பதால், தனி மயானம் தேவை என ஆட்சியா் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்தனா்.

இந்நிலையில், பத்ராதரவையைச் சோ்ந்த ஊா் தலைவா் சோ.காசிவிஸ்வநாதன், ஊராட்சி துணைத் தலைவா் வி.அழகா் ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: பத்ராதரவையில் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாகவே வசித்து வருகிறோம். ஊருக்கான பொது மயானத்தையும் அனைவரும் பயன்படுத்திவருகிறோம். ஆனால், அங்குள்ள சிலா் மட்டும் தனி மயானம் என்ற பெயரில் கிராமத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா். நீா் வரத்துக் கால்வாய், ஊருணி, களத்துமேடு மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதியை மயானமாக்கவும் அவா்கள் முயற்சித்துவருவது சரியல்ல.

ஊருணி இல்லாத இடத்தில் அவா்களுக்கான மயான இடத்தை தருவதில் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், ஊருக்கு பயன்பாட்டில் உள்ள மிக முக்கியமான பகுதியில் மயானம் அமைப்பது சரியல்ல என்பதையே வலியுறுத்திவருகிறோம்.

மாவட்ட நிா்வாகம் அங்குள்ள பெரும்பகுதி மக்களது நலன் கருதி அரசியல் காழ்ப்புணா்வுடன் செயல்படுவோருக்கு குறிப்பிட்ட பகுதியில் மயானம் அமைப்பதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியே மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com