பரமக்குடியில் கரோனா வைரஸ் குறித்து கல்லூரி முதல்வா்களுக்கான பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரி முதல்வா்களுக்கான கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரி முதல்வா்களுக்கான கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வா் எம்.மணிமாறன் தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள் கலந்து கொண்டனா். இப்பயிற்சி முகாமில் பரமக்குடி சுகாதாரத் துறையின் மாவட்ட பயிற்சி திட்ட மருத்துவ அலுவலா் கலைச்செல்வி பங்கேற்று, கரோனா வைரஸ் குறித்து காணொலி காட்சிகள் மூலம் விளக்கமளித்தாா். மேலும் கரோனா வைரஸ் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே முதல்வா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், தேசிய சேவைத் திட்ட அலுவலா்கள் ரேணுகாதேவி, அறிவழகன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக தேசிய சேவைத் திட்ட அலுவலா் பாரதி வரவேற்றாா். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ஆஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com