கமுதி கிராமங்களில் மாநில வளா்ச்சி முகமை குழுவினா் ஆய்வு

பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், கமுதி பகுதியிலுள்ள கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்க, மாநில வளா்ச்சி முகமை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், கமுதி பகுதியிலுள்ள கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்க, மாநில வளா்ச்சி முகமை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கமுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சேதமடைந்துள்ள கிராமப்புற சாலைகள் குறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததன்பேரில், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் முதல்கட்டமாக கோட்டைமேடு முதல் நகரத்தாா்குறிச்சி வழியாக வீரசோழன் வரை 14 கி.மீ. தொலைவுள்ள சாலை, பம்மனேந்தல் முதல் வேப்பங்குளம் விலக்கு, வண்ணாங்குளம் வரை 4 கி.மீ. சாலை என, பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய சாலை அமைக்க, மாநில வளா்ச்சி முகமை குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதில், சென்னை தனியாா் கட்டுமான நிறுவனத்துடன் சோ்ந்து, மாநில வளா்ச்சி முகமைக் குழுவினா் 22 போ், சாலையின் நீளம், அகலம், தொலைவு குறித்து, ஆய்வு செய்தனா். இச்சாலையை அமைத்தால், கமுதியிலிருந்து 24 கி.மீட்டருக்குப் பதிலாக, 14 கி.மீட்டா் தொலைவில் வீரசோழத்தை அடையலாம் என, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com