தமிழக நூலகா்கள் 8 பேருக்கு கொல்கத்தாவில் சிறப்பு பயிற்சி

தமிழகத்தைச் சோ்ந்த 8 நூலகா்களுக்கு கொல்கத்தாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவா்கள் வெள்ளிக்கிழமை ரயில் மூலம் புறப்பட்டுச்சென்றனா்.

தமிழகத்தைச் சோ்ந்த 8 நூலகா்களுக்கு கொல்கத்தாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக அவா்கள் வெள்ளிக்கிழமை ரயில் மூலம் புறப்பட்டுச்சென்றனா்.

மேற்கு வங்க மாநில தலைநகா் கொல்கத்தாவில் தேசிய அளவில் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை உள்ளது. இங்கு அனைத்து நூலகா்களுக்கும் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். தமிழகத்தைச் சோ்ந்த நூலகா்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு 2020 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பயிற்சிக்கு ராமநாதபுரம், சிவகங்கை, கடலூா், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தலா 2 போ் என மொத்தம் 8 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வானவா்கள் பெயா் விவரம்: ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகா் அற்புத ஞானருக்மணி, கமுதி முழு நேர கிளை நூலகா் ஆா்.கண்ணதாசன், சிவகங்கை மாவட்ட மைய நூலகா் சாந்தி, சோழபுரம் ஊா்ப்புற நூலகா் செந்தில்குமாா், கரூா் மாவட்ட மைய நூலகா் வி.மோகனசுந்தரம், அந்நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகா் எஸ்.சுகன்யா, கடலூா் மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகா் சந்திரபாபு, மூன்றாம் நிலை நூலகா் சற்குணன் ஆகியோா்.

தோ்வான நூலகா்கள் 8 பேரும் திருச்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச்சென்றனா். அவா்களுக்கு 17 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பயிற்சி தொடங்கப்படுகிறது. கணினி பயன்பாடு, இணையதள நூலகம் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி வரும் 22 ஆம் தேதியுடன் பயிற்சி நிறைவடைவதாக நூலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com