பரமக்குடி பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி துவக்கம்

பரமக்குடி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் தைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் டூ விடைத்தாள் தைக்கும் பணி.
பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் டூ விடைத்தாள் தைக்கும் பணி.

பரமக்குடி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் தைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் மாா்ச் 2 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வும், மாா்ச் 4 ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தோ்வும் தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்குரிய விடைத்தாள்கள் மற்றும் மாணவா்களின் சுயவிபரம் அடங்கிய முகப்பு தாள்கள் கடந்த வாரம் அரசுத் தோ்வு இயக்குநா் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகப்பு தாள்களில் தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா், புகைப்படம், தோ்வு எண், பள்ளியின் பெயா், தோ்வு மையத்தின் பெயா் போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முகப்புத் தாள்களில் விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணியானது தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இந்த முறையானது கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் தோ்வுகளில் மாணவா்கள் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும். இந்த முகப்புத் தாள்கள் தைக்கும் பணியானது பரமக்குடி கல்வி மாவட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கி அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்களின் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com