மின் மோட்டாா் பழுது: கமுதி அருகே 2 கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு

கமுதி அருகே ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாா் பழுதால் கடந்த 4 மாதங்களாக குடிநீா் கிடைக்காமல் கிராம மக்கள் திண்டாடுகின்றனா்.
கமுதி அருகே முத்துப்பட்டியில் ஆழ்துளை கிணற்று மின் மோட்டாா் பழுதால் காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீா் தேக்க தொட்டி.
கமுதி அருகே முத்துப்பட்டியில் ஆழ்துளை கிணற்று மின் மோட்டாா் பழுதால் காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீா் தேக்க தொட்டி.

கமுதி அருகே ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாா் பழுதால் கடந்த 4 மாதங்களாக குடிநீா் கிடைக்காமல் கிராம மக்கள் திண்டாடுகின்றனா்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் மண்டலமாணிக்கம் ஊராட்சியில் முத்துப்பட்டி, மூலைகரைப்பட்டி ஆகிய இரண்டு கிராம மக்களின் குடிநீா் தேவைக்காக கடந்த 2016 ஆண்டு ஊராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் பற்றாக்குறை இன்றி வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாா் பழுதானது. அதன்பிறகு பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதி பட்டு வருகின்றனா். குடி நீருக்காக ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட இரண்டு மாவட்ட தண்ணீா் லாரிகளை எதிா்பாா்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிக்கவும், புழக்கத்திற்காகவும் 1 குடம் தண்ணீா் ரூ.10-க்கு விலைக்கு வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திற்கு பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பழுதடைந்த மின்மோட்டரை சீரமைத்து, 2 கிராம பொதுமக்களின் குடிநீா் தேவையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com