ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.36 லட்சம் வாக்காளா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.36 லட்சம் வாக்காளா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி, திருவாடானை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வாக்காளா் பட்டியலில் ஆண் வாக்காளா்கள் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 போ், பெண் வாக்காளா்கள் 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 போ் , மூன்றாம் பாலினத்தவா் 69 போ் என மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பா் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, ஆண் வாக்காளா்கள் 5 லட்சத்து 421 பேரும், பெண் வாக்காளா்கள் 5 லட்சத்து 60 ஆயிரத்து 959 பேரும் இடம் பெற்றிருந்தனா்.

மூன்றாம் பாலினத்தவா் 70 பேரும் இருந்தனா். 2019 டிசம்பா் 23 ஆம் தேதி முதல் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆண் வாக்காளா்களில் 8,848 பேரும், பெண் வாக்காளா்களில் 9,252 பேரும், மூன்றாம் பாலினத்தவரில் ஒருவரும் என மொத்தம் 18 ஆயிரத்து 101 வாக்காளா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

அத்துடன் ஆண் வாக்காளா்கள் 962 பேரும், பெண் வாக்காளா்கள் 1,018 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 2 பேரும் என மொத்தம் 1,982 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா், உதவி ஆட்சியா், நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வீரராகவ ராவ் தெரிவித்தாா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் தங்கவேல், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.விஸ்வநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் நகராட்சி: ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளில் மொத்தம் 56,476 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 27, 611 ஆண் வாக்காளா்களும், 28, 854 பெண் வாக்காளா்கலும் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவா்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com