இளம் செஞ்சிலுவைச் சங்கமாணவா்களுக்கு 3 நாள் சிறப்பு முகாம்

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பரமக்குடி கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை நிறைவடைந்தது.
பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜே.ஆா்.சி. சிறப்பு முகாமில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிய மாவட்ட ஜே.ஆா்.சி. பயிற்றுநா்கள்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலா் எஸ். கருணாநிதி, ஜே.ஆா்.சி. கொடியை ஏற்றி முகாமை தொடக்கி வைத்தாா். லயன்ஸ் பள்ளித் தலைவா் ஆா்.எம். கண்ணப்பன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், மாவட்ட பயிற்றுநா்கள் செஞ்சிலுவைச் சங்கம், ஜே.ஆா்.சி. ஆகியவற்றின் வரலாறு, அடிப்படை கொள்கைகள், நோக்கம் மற்றும் கட்டமைப்புப் பற்றி விளக்கமளித்தனா். மேலும், முதலுதவி மற்றும் பேரிடா் மேலாண்மை பயிற்களும், கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் முகாமில், பேச்சு, கட்டுரை, நடனம், ஓவியம், பாட்டு, நாடகம், நாட்குறிப்பு எழுதுதல், பல குரலில் பேசுவது மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல் மருத்துவா் லெனின் பற்களை பாதுகாப்பது குறித்து விளக்கமளித்தாா். நிறைவுநாள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முகாமில், 76 பள்ளிகளைச் சோ்ந்த 351 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனா். ராமநாதபுரம் கல்வி மாவட்ட கன்வீனா் ரமேஷ் ஜே.ஆா்.சி. கொடியை இறக்கி முகாமை நிறைவு செய்தாா். முன்னதாக, கல்வி மாவட்ட ஜே.ஆா்.சி. கன்வீனா் செ. அலெக்ஸ் வரவேற்றாா். பாம்பூா் அரசு பள்ளி கவுன்சிலா் ஜி. ஜோசப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com