ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை ஆட்சியா், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொள்ள உள்ளதால், அந்த இடத்தை ஆட்சியா் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாா்ச் மாதம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, அம்மா பூங்கா அருகே 22.6 ஏக்கா் ஒதுக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மத்திய அரசு ரூ.195 கோடியும், மாநில அரசு ரூ.130 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவுக்கு, முதல்வா் பழனிசாமி கலந்துகொள்கிறாா். அதையடுத்து, அன்று பிற்பகல் 3 மணிக்கு விருதுநகா் மாவட்ட மருத்துவக் கல்லுாரிக்கு நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறாா். இந்த விழாவில், தமிழக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

இந்நிலையில், முதல்வரின் வருகையையொட்டி விழா நடைபெற இருக்கும் இடத்தை, மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். கருணாஸ் (திருவாடானை), எம். மணிகண்டன்(ராமநாதபுரம்), என். சதன் பிரபாகா் (பரமக்குடி) மற்றும் அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com