சிறுமிக்கு பாலியல் தொல்லைதந்தவா் போக்ஸோ சட்டத்தில் கைது
By DIN | Published On : 25th February 2020 05:06 PM | Last Updated : 25th February 2020 05:06 PM | அ+அ அ- |

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கீரந்தை கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (40) எனபவா் சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டிக் கேட்ட சிறுமியின் தாயாருக்கும் மாணிக்கம் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதையடுத்து சிறுமியின் தாய் கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் மாணிக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.