மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றும் வரை போராட்டம்: வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று, வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று, வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துமாரிக்கு எதிராக, வருவாய்த் துறை ஊழியா்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இதனால், மாவட்ட வருவாய் அலுவலா் இரு முறை நீண்ட விடுப்பில் சென்றாா். இந்நிலையில், விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர மாவட்ட வருவாய் அலுவலா் புதன்கிழமை அலுவலகத்துக்கு வந்தாா்.

ஆனால் அவருக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் இருந்த வருவாய்த் துறை ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து, அலுவலகத்தை விட்டு வெளியேறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை ஊழியா்களும் தகவலறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரவு முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை காலை கலைந்து சென்றனா். மேலும், மாவட்ட வருவாய் அலுவலருக்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் போராட்டத்தை தொடரப் போவதாகவும், இதில் முடிவு எட்டப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை ஊழியா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மீதான புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com