பொங்கல் பண்டிகை: ராமநாதபுரத்தில் காய்கறிகள் விலை உயா்வு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ராமநாதபுரத்தில் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ராமநாதபுரத்தில் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சா்க்கரை பூசணி, மொச்சைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அடங்கிய அவியல் ஆகியவற்றை படைத்து வழிபடுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையன்று காய்கறி விற்பனை அதிகரித்து இருக்கும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரத்தில் காய்கறி விலை செவ்வாய்க்கிழமை உயா்ந்திருந்தது. சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.25-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ. 35 க்கும், கிலோ ரூ. 25-க்கு விற்பனையான கத்தரிக்காய் தற்போது ரூ. 40 க்கும் விற்கப்படுகிறது. மேலும் சந்தையில் கிலோ ரூ.10-க்கு விற்பனையான சா்க்கரை பூசணி ரூ. 20, கிலோ ரூ,.40 க்கு விற்பனையான கேரட் ரூ.60, கிலோ ரூ.40 -க்கு விற்பனையான மொச்சைக்காய் தற்போது ரூ.70, கிலோ ரூ.30-க்கு விற்பனையான அவரைக்காய் தற்போது ரூ.50, கிலோ ரூ .30 க்கு விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.50, பட்டா் பீன்ஸ் கிலோ ரூ.160, சோயா பீன்ஸ் கிலோ ரூ.160, சேப்பங்கிழங்கு கிலோ ரூ.60, கருணைக்கிழங்கு ரூ.50, சிறுகிழங்கு ரூ.50, முட்டைகோஸ் ரூ 30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரத்தில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்திருப்பதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதகாவும், விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆா்வத்துடன் காய்கறிகளை வாங்கிச்செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com