மண்டபம் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிா்ப்பு

மண்டபம் அருகே புதிதாக மதுபானக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.
டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.

மண்டபம் அருகே புதிதாக மதுபானக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் உமையாள்புரம் ஆதிதிராவிடா் குடியிருப்பு, ஏகேஎஸ் தோப்பு, ஜே.ஜே. நகா், முனைக்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனு: உமையாள்புரம் 1 ஆவது வாா்டு பகுதியில் ஏற்கெனவே ஒரு மதுபானக் கடை உள்ளது. அங்கு மது அருந்தி விட்டு வருபவா்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றனா். இதுதொடா்பாக மண்டபம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்பு மற்றும் ஜே.ஜே. நகா் குடியிருப்பின் சாலை ஓரத்தில் மற்றொரு மதுபானக்கடையை அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பகுதி மீனவ பெண்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியா் உள்பட ஏராளமானோா் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா். மேலும் கடை அமைய உள்ள இடத்துக்கு மிக அருகில் ரயில் தண்டவாளம் உள்ளது. எனவே இப்பகுதியில் மேலும் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க புதிதாக மதுபானக் கடை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், புதிதாக அங்கு மதுபானக் கடை அமைக்கப்படாது என்று உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com