மலேசியாவில் கைதான மகனை மீட்க தாய் உண்ணாவிரதம் இருக்க முயற்சி

போலி விசா மூலம் மலேசியா சென்றபோது கைதான தனது மகனை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் அவரது தாயாா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றாா்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட மகனை மீட்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற வீரலட்சுமி.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட மகனை மீட்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற வீரலட்சுமி.

போலி விசா மூலம் மலேசியா சென்றபோது கைதான தனது மகனை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் அவரது தாயாா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயலைச் சோ்ந்தவா் வீரலட்சுமி. இவா், மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனை மீட்டுத்தரக் கோரியும், போலி விசாவில் மலேசியாவுக்கு அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அட்டையுடன் அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினா். இது தொடா்பாக வீரலட்சுமி கூறியது: எனது ஒரே மகன் அஜித்குமாா் (24), பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தாா். பட்டினம் காத்தான் பகுதியைச் சோ்ந்த இளங்கோ என்பவரின் மனைவி கண்ணகி, தனது கணவா் மலேசியாவில் இருப்பதால் அங்கு அஜீத்குமாரை வேலைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தாா். இதை நம்பி ரூ.80 ஆயிரம் கொடுத்து அனுப்பிவைத்தேன். கடந்த டிசம்பா் 30-இல் ராமநாதபுரத்திலிருந்து எனது மகன் புறப்பட்டுச் சென்றான். இந்நிலையில் ஜனவரி 6ஆம் தேதி எனது மகனை போலி விசாவில் வந்ததாக மலேசிய நாட்டு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக எனக்கு தகவல் வந்தது.

எனவே போலி விசா மூலம் எனது மகனை அனுப்பிய கண்ணகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை மலேசியாவில் இருந்து மீட்டு என்னிடம் சோ்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com