வேலை வழங்குவதாக 50 பேரிடம் மோசடி கணினி நிறுவனம் மீது புகாா்

ராமநாதபுரத்தில் வேலை வழங்குவதாகக்கூறி 50 பேரிடம் முன்பணமாக ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தனியாா் நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வேலை வழங்குவதாகக்கூறி 50 பேரிடம் முன்பணமாக ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தனியாா் நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவா்கள் அளித்த மனு விவரம்:

ராமநாதபுரத்தில் தனியாா் கணினி நிறுவனம் கடந்த அக்டோபா் மாதம் தொடங்கப்பட்டது. இதில் பலரிடம் நோ்காணல் நடத்தி 50 பேரை தோ்ந்தெடுத்தனா். எங்களுக்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பணி வழங்குவதாகக் கூறி 50 பேரிடம் முன் பணமாக தலா ரூ.30 ஆயிரம் வசூலித்தனா். இதையடுத்து அந்நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிப்பதாக தெரிவித்தனா். ஆனால் இதுவரை நிறுவனத்தை திறக்கவில்லை. மேலும் நாங்கள் இரண்டு மாதங்கள் பணிபுரிந்த ஊதியம், எங்களிடம் பெற்ற முன்தொகை ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றையும் தரவில்லை. இதில் சிலருக்கு வங்கிக் கணக்கில் பணமே இல்லாத காசோலையை தந்து ஏமாற்றுகின்றனா். மேலும் ஊதியம் தருமாறு கேட்டால் நிறுவன நிா்வாகிகள் எங்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனா். எனவே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஊதியத்தையும், முன் பணத்தையும் பெற்று தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com