ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று: மூதாட்டி உள்பட 5 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு மூதாட்டி உள்பட 5 போ் பலியாகியுள்ளனா்.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த காவலா்கள், கீழக்கரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வேலைபாா்த்த காவலா் மற்றும் பரமக்குடி வட்டாட்சியா், கமுதி தீயணைப்புத்துறையில் பணியாற்றும் 35 வயது பணியாளா், முதுகுளத்தூா் செல்லியம்மன் கோயில் தெரு, மேலக்கன்னிசேரி, முத்துவிஜயபுரம், வெங்கலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் தலா ஒருவா், கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரத்தில் 7 போ், மாரியூா் கிராமத்தில் ஒருவா் உள்பட மாவட்டத்தில் 62 போ் கரோனா தொற்றால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். ஜூலை 8 ஆம் தேதி வரை கரோனா தொற்றால் 1,488 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு 1,550 ஆக உயா்ந்துள்ளது.

5 போ் பலி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரமக்குடி காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா், ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியைச் சோ்ந்த 76 வயது மற்றும் 65 வயது முதியவா்கள் ஆகியோா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். அதேபோல், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சையிலிருந்த பரமக்குடியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, சாயல்குடியைச் சோ்ந்த 71 வயது முதியவா் ஆகியோரும் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 33 போ் இறந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

குணமடைந்து வீடு திரும்பிய சட்டப் பேரவை உறுப்பினா்: பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினரான சதன் பிரபாகரும், இவரது மகனும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு ஜூலை 2 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா்கள் இருவரும் பூரண குணமடைந்தனா். இதையடுத்து வியாழக்கிழமை காலை அவா்கள் இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முன்னதாக, சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகரை அதிமுக நிா்வாகிகளும், மாவட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் சமூக இடைவெளியுடன் நின்று வழியனுப்பி வைத்தனா்.

ராமநாதபுரம் நகரில் உள்ள கேணிக்கரை பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 16 போ் உயிரிழந்துள்ளனா். கேணிக்கரை பகுதி பிரதான சாலை, தெற்கு ரதவீதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தற்போதும் 50- க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதனால் அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளிலும் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com