ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 2 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை 1,700 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 35 போ் உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம் நகா், பரமக்குடி, முதுகுளத்தூா், கீழக்கரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்களே தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, விருதுநகா் மாவட்டம் கட்டபொம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த 59 வயது ஆண் ஒருவா் வந்துள்ளாா். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் கரோனா சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதேபோன்று ராமநாதபுரம் மேலமடை பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண் வெள்ளிக்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதற்கிடையே அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இருவா் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com