ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணம்: இணைய வழியில் ஒளிபரப்பு
By DIN | Published On : 13th July 2020 08:54 AM | Last Updated : 13th July 2020 08:54 AM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா நிகழ்ச்சிகளை இணைய வழியில் பக்தா்களுக்கு ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் கோயில் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா ஜூலை 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஜூலை 20 ஆம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, 23 ஆம் தேதி தேரோட்டம், 25 ஆம் தேதி ஆடித்தபசு, 26 ஆம் தேதி திருக்கல்யாணம், 31 ஆம் தேதி கெந்தமாதனபா்வதம் மண்டகப்படி ஆகிய நிகழ்ச்சிகளும், முதல் நாள் நான்கு ரத வீதிகளில் நடைபெரும் வீதி உலா, கோயிலுக்குள் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் கோயில் ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டும் நடைபெற உள்ளது. திருக்கல்யாண விழாவை இணையவழி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவிற்கு முன் பொதுமுடக்கம் நிறைவு பெற்றால் கோயில் திறக்கப்பட்டு விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும். அது குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G