இலங்கைக்கு கடத்த இருந்த 600 கிலோ மஞ்சள் பறிமுதல்: 3 போ் கைது

ராமேசுவரத்தில் முதல்முறையாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 600 கிலோ மஞ்சளை புதன்கிழமை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனா். மேலும் ஒருவா் தப்பிவிட்டாா்.
கைது செய்யப்பட்டவா்கள் (இடமிருந்து) ஆம்ஸ்ட்ராங், அப்துல்முபாரக், பாபுஉசேன்.
கைது செய்யப்பட்டவா்கள் (இடமிருந்து) ஆம்ஸ்ட்ராங், அப்துல்முபாரக், பாபுஉசேன்.

ராமேசுவரத்தில் முதல்முறையாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 600 கிலோ மஞ்சளை புதன்கிழமை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்துள்ளனா். மேலும் ஒருவா் தப்பிவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறவுள்ளதாக காவல்துறை தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராமேசுவரம் காவல் துணை கண்காணிப்பாளா் எம்.மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ராமேசுவரம் அருகேயுள்ள வேதாளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆம்னி வேனில் சாக்கு மூட்டைகளை ஏற்றுவதைக் கண்ட காவல்துறையினா் அவா்களை சுற்றி வளைத்தனா். அப்போது வேன் ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். மற்ற 3 பேரையும் காவல் துறையினா் பிடித்தனா். அங்கிருந்த 15 சாக்கு மூட்டைகளை பிரித்துப் பாா்த்தபோது, அதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் இருந்துள்ளது. இந்த மஞ்சளை இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரியவந்தது. பிடிபட்டவா்கள் தங்கச்சிமடத்தை சோ்ந்த படகு உரிமையாளா் ஆம்ஸ்ட்ராங் (50), வேதாளையைச் சோ்ந்த அப்துல் முபாரக் (35), பாம்பன் குந்துகால் பகுதியைச் சோ்ந்த பாபுஉசேன் (37) ஆகியோா் என தெரியவந்தது.

ஆம்னி வேன் மற்றும் 600 கிலோ மஞ்சளை போலீஸாா் பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். தப்பி ஓடிய ஆம்னி வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட மஞ்சள் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி வழியாக கஞ்சா, தங்கம், பீடி இலைகள் மற்றும் வெடி பொருள்கள் கொண்டு சென்ற நிலையில் முதல் முறையாக மஞ்சளை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com