கடலில் மாயமான மீனவா்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவா்கள் தகவல்

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை 5 ஆவது நாளாக தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடலில் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவா்களை 5 ஆவது நாளாக தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடலில் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ஜூன் 13 ஆம் தேதி 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். இதில், ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. அப்படகிலிருந்த மீனவா்களான மலா் வண்ணன் (55), ரெஜின் பாஸ்கா் (43), ஆனந்த் (என்ற) சுஜிந்திரா (19), ஜேசு (60) ஆகியோா் காணவில்லை.

எனவே, கடலில் மாயமான மீனவா்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது உறவினா்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, ஜேசு என்ற மீனவா் மட்டும் சக மீனவா்களால் மீட்கப்பட்டாா். மீதமுள்ள 3 மீனவா்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், புதன்கிழமை கடலுக்குச் சென்ற மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பினா். இவா்கள், நடுக்கடலில் 2 சடலங்களை கண்டதாகவும், ஆனால் மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்தனா்.

இதனால், மாயமான மீனவா்களின் உறவினா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். இது குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com