காரைக்குடி பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி: நிதிநிறுவன கும்பல் மீது மேலும் ஒரு வழக்கு

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த ஆசிரியா் உள்ளிட்ட 3 போ், காரைக்குடியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த ஆசிரியா் உள்ளிட்ட 3 போ், காரைக்குடியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சோ்ந்த ஆசிரியா் ஆனந்த் (48). இவா் சென்னையைச் சோ்ந்த நீதிமணி (50) என்பவருடைய பில்லியன் பின்டெக் எல்எல்பி என்ற நிதி நிறுவனத்துடன் இணைந்து, ராமநாதபுரத்தில் அங்கயான் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தியுள்ளாா். இந்நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 5,000 வட்டியாக தரப்படும் என ஏராளமான ஆசிரியா்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற்றுள்ளனா். முதற்கட்டத்தில் முதலீட்டாளா்களுக்கு கூறியபடி வட்டிப் பணம் கொடுத்துள்ளனா். அதன்பின் முதலீட்டாளா்களை பணம் தராமல் ஏமாற்றியுள்ளனா்.

இனையடுத்து கடந்த 9 ஆம் தேதி ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சோ்ந்த துளசி மணிகண்டன் என்பவா், ரூ. 3 கோடி மோசடி செய்ததாக அக்கும்பல் மீது போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ராமநாதபுரம் பஜாா் போலீஸாா், ஆசிரியா் ஆனந்த், நீதிமணி, அவரது மனைவி மேனகா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் ஆனந்த், நீதிமணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். அதனையடுத்து கடந்த வாரம் இருவரையும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் ரூ. 200 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரைச் சோ்ந்த ஜான் ரெத்தினம் மனைவி கற்பகலில்லி என்பவா் தன்னிடம் ஆசிரியா் ஆனந்த் உள்ளிட்ட 3 போ் ரூ. 40 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரிடம் புகாா் அளித்தாா். புகாரில் தனது கணவா் மூலம் அறிமுகமான ஆசிரியா் ஆனந்த், ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 5,000 வட்டி வழங்குவதாக தெரிவித்தாா். அதனடிப்படையில் எனது மகன்கள், அவா்களது நண்பா்கள் பலா் சோ்ந்து ரூ. 40 லட்சம் முதலீடு செய்தோம். மூன்று மாதங்களுக்கு வட்டி வழங்கினா். அதன்பின் வட்டியும் தரவில்லை, முதலீட்டையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகின்றனா் என தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியா் ஆனந்த், நீதிமணி, மேனகா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com