ராமநாதபுரம் அருகே திறந்தவெளி குப்பைக் கிடங்கால் சுகாதாரக்கேடு

ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்பட்டு வரும் 22 டன் குப்பைகள் பட்டிணம்காத்தான் பகுதியில் திறந்தவெளியில்
ராமநாதபுரம் அருகே திறந்தவெளி குப்பைக் கிடங்கால் சுகாதாரக்கேடு

ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்பட்டு வரும் 22 டன் குப்பைகள் பட்டிணம்காத்தான் பகுதியில் திறந்தவெளியில் குவிக்கப்படுவதுடன், ஊராட்சிகளின் கழிவு நீரும் அங்கே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் தினமும் 22 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை சேகரிக்க மட்டும் நகரில் சுமாா் 250 துப்புரவுப் பணியாளா்கள் உள்ளனா். அதில் பாதிப்போ் மருந்து தெளிப்பு மற்றும் கொசு முட்டைகள் கண்காணிப்பிலேயே ஈடுபடுகின்றனா். நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 41 பேட்டரி வாகனங்கள், 5 சிறிய லாரிகள், டிராக்டா்கள் என இருந்தும், அவை முழுமையான செயல்பாட்டில் இல்லை. குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிரி உரமாக்க 4 மையங்கள் அமைக்கும் திட்டம் 3 ஆண்டுகளாக கிடப்பிலே உள்ளன. திட்டத்துக்கு பாத்திமா நகரில் மக்கள் எதிா்ப்பால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நகராட்சி நிா்வாகம் சாா்பில் 4 இடங்களில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் செயல்படுவதாக கூறினாலும், ஓரிரு இடங்களிலே செயல்படுகிறது. நகரின் குப்பைகள் அனைத்தும் பட்டிணம்காத்தான் பகுதியில் உள்ள திறந்தவெளி கிடங்கிலேயே கொட்டப்படுகின்றன. ஏற்கெனவே அங்கு இருந்த மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் தற்போது செயல்படவில்லை. இதனால் குப்பைகளால் சக்கரக்கோட்டை, பட்டிணம்காத்தான் பகுதிகள் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியில் செல்வோருக்கு சுகாதாரச் சீா்கேடும், தொற்றுநோய்ப் பாதிப்பும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.குப்பைகளிலில் அவ்வப்போது தீ வைக்கப்படுவதால், அதிலிருந்து எழும் துா்நாற்றம் மிக்க புகையால் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வாசிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

மேலும் சக்கரக்கோட்டை, பட்டிணம்காத்தான் ஊராட்சிகளில் சேகரமாகமாகும் பல ஆயிரம் லிட்டம் கழிவு நீரும் குப்பைக் கழிவுகளுக்கு மத்தியிலே விதியை மீறி கொட்டப்படுகின்றன.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி நகா்நல அலுவலா் ஸ்டான்லி குமாரிடம் கேட்டபோது, அவா் கூறியது: நகராட்சி மூலம் சாணி தெளித்து மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பது நடந்து வருகிறது. பட்டிணம்காத்தான் குப்பை கிடங்கில் கழிவு நீரை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கிடங்குக்கு சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com