ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோா் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரை திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட சிகிச்சை பரிசோதனைகள் பாதிக்கப்பட்டன. மின்விசிறிகள் இயங்காததால் உள்நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அலுவலகத் தரப்பில் கேட்டபோது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மரங்களை அகற்றும் பணியின் போது மின் கம்பி சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com