மண்டபம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

மண்டபம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக, பேரூராட்சி செயல் அலுவலா் கி. ஜனாா்த்தனன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

மண்டபம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக, பேரூராட்சி செயல் அலுவலா் கி. ஜனாா்த்தனன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணி, பேரூராட்சி செயல் அலுவலா் கி. ஜனாா்த்தனன் தலைமையில் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஒலிபெருக்கி மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

அதில், பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தமாக கழுவவேண்டும், தேவையாற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும், அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகளை தவிா்த்து மற்ற கடைகள் திறக்கக்கூடாது என்றும், மீறி திறக்கப்பட்டால் கடைக்கு சீல் வைப்பதுடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடா்ந்து, பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

தடுப்பு நடவடிக்கையில், இளநிலை உதவியாளா் சு. முனியசாமி, சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன், மேற்பாா்வையாளா் ஜாகீா்உசேன் மற்றும் பேரூராட்சிப் பணியாா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com