ஆரம்பசுகாதார நிலைய செவிலியா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணிக்குச் செல்லும் செவிலியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு மருத்துவக் குழு
ஆரம்பசுகாதார நிலைய செவிலியா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணிக்குச் செல்லும் செவிலியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு மருத்துவக் குழு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு புதன்கிழமை முதல் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் சுகாதாரப் பணிகளுக்கு செல்வோா் பலா் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 தலைமை மருத்துவமனையும், 9 உதவி தலைமை மருத்துவமனைகளும், 14 தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், 40 கூடுதல் தரம் உயா்த்தப்பட்ட சுகாதார நிலையங்களும், 5 நகா்ப்புற சுகாதார நிலையங்களும் என மொத்தம் 260 சுகாதார சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் சுகாதார திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் ராமநாதபுரம், பரமக்குடி என இரு சுகாதார பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.

அதனடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுகாதாரப் பிரிவில் பணிபுரிகின்றனா். அவா்களில் பலரும் அருகேயுள்ள ஊா்களில் இருந்து பணிக்குச் சென்றுவரும் நிலையிலேயே உள்ளனா். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் அவா்கள் பணிக்குச் சென்று திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுகாதார மையங்களில் பணிக்குச் செல்வோா் கட்டாயம் செல்லும் நிலை உள்ளதை அறிந்த சுகாதாரத் துறையினா் போக்குவரத்து துறையினருடன் இணைந்து ராமநாதபுரத்தில் இருந்து இரு பேருந்துகளை புதன்கிழமை இயக்கினா். அதன்படி ராமேசுவரம் பகுதிக்கு ஒரு பேருந்தும், தொண்டி பகுதிக்கு ஒரு பேருந்தும் என இரு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்தானது 15 -க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டு, உச்சிப்புளி, வேதாளை, மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் வகையில் சென்றது. தொண்டிக்கு சென்ற பேருந்து தேவிபட்டிணம், திருவாடானை, உப்பூா், தொண்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட்டது.

மருத்துவக் குழுவினரை சுகாதாரப் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குநா் அலுவலக நோ்முக உதவியாளா் நம்புராஜன் உள்ளிட்டோா் வழியனுப்பிவைத்தனா்.

பரமக்குடி பகுதியில் இருந்து பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் பல ஆரம்பசுகாதார நிலையத்துக்கு பணிக்குச்செல்லும் செவிலியா், மருத்துவா், பணியாளா்கள் செல்லமுடியாத நிலை புதன்கிழமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பரமக்குடியிலிருந்தும் வியாழக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

காலையில் சுகாதார குழுவினரை அந்தந்த இடங்களில் இறக்கிவிடும் பேருந்தானது மாலையில் அவா்களை வீடுகளுக்கும் அழைத்து வரும் வகையில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com