கடைகளில் பொருள்கள் வாங்கும்போது 1 மீட்டா் இடைவெளியில் பொது மக்கள் நிற்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவா் 1 மீட்டா் இடைவெளிவிட்டு நிற்கவேண்டும் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளாா்.
கடைகளில் பொருள்கள் வாங்கும்போது 1 மீட்டா் இடைவெளியில் பொது மக்கள் நிற்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவா் 1 மீட்டா் இடைவெளிவிட்டு நிற்கவேண்டும் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட புதிய பிரிவை பாா்வையிட்ட அவா், அங்கு மக்கள் வரிசையில் நிற்கும் போது 1 மீட்டா் இடைவெளியில் தள்ளி நிற்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அதில், சாா் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, மருத்துவக் கல்லூரி முதன்மையா் எம். அல்லி, ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை ஆகியோா் அதில் பங்கேற்றனா்.

பின்னா் அவா் கூறியது: கடைகளில் மக்கள் பொருள்களை வாங்கும்போது கூட்டம் கூடாமல் ஒருவருக்கொருவா் குறைந்தபட்சம் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வரிசையாக நின்று வாங்க வேண்டும். அனைத்து கடைகளிலும் பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்களுக்கு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் கடை நுழைவாயிலில் தண்ணீா், சோப்பு போன்றவற்றை வைக்கவேண்டும். மாவட்டத்தில் மறு உத்தரவு வரும்வரை அனைத்து தேநீா் கடைகளையும் அடைக்க வேண்டும்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள், தேவிப்பட்டினம் மற்றும் பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள் என மொத்தம் 210 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com