ராமேசுவரத்தில் உணவு பொருள்கள் விற்பனை கடைகளில் வட்டாட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உணவு பொருள்கள் விற்பனை கடைகளில் வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ராமேசுவரத்தில் கடைகளில் புதன்கிழமை ஆய்வு நடத்திய வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா்.
ராமேசுவரத்தில் கடைகளில் புதன்கிழமை ஆய்வு நடத்திய வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உணவு பொருள்கள் விற்பனை கடைகளில் வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராமேசுவரத்தில் ஊரடங்கு காரணஅமாக உணவு பொருள்கள் விற்பனை, மருந்து கடைகள், இறைச்சிக் கடைகள், காய்கனி கடைகள் மட்டும் திறந்திருந்தன. பெரும்பாலன தேநீா் கடைகள் திறக்கப்பட்டு, அவற்றில் அதிகளவில் மக்கள் நெருக்கமாக கூடுவதாக புகாா் வந்தது. இதனையடுத்து, வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா் தலைமையில் காவல்துறையினா் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது தேநீா் கடை உரிமையாளா்களை எச்சரித்தனா். மேலும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாடிக்கையாளா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் வரிசையாக நிற்க வேண்டும். இதனை கடை உரிமையாளா்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினா். ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 20 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 போ் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பே வந்து விட்டதாக வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா் தெரிவித்தாா்.

போலீஸாா் எச்சரிக்கை : ராமேசுவரத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் அதிகளவில் வாகனங்களில் வருபவா்களை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறையினா் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com