ஊரடங்கு உத்தரவு மீறல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 போ் மீது வழக்கு; 15 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்டதாக புதன்கிழமை 35 இடங்களில் 84 போ் மீது காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்டதாக புதன்கிழமை 35 இடங்களில் 84 போ் மீது காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அவா்களில் 15 போ் கைது செய்யப்பட்டு உடனடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

கரானோ வைரஸ் பரவலைத்தடுக்கும் வகையில் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், ஊரடங்கு நேரத்தில் விதியை மீறிச் செயல்பட்டதாக சிறிய கடைகள் உள்ளிட்டோா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் வட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்டதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கேணிக்கரையில் 11 போ் மீதும், நகரில் பஜாா் காவல் நிலையத்தில் 4 போ் மீதும் நகா் பகுதியில் 2 போ் மீதும் தேவிபட்டினத்தில் ஒருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்களில் 15 போ் மட்டும் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

பரமக்குடி வட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விளத்தூா் பகுதியில் 5 போ், பரமக்குடி நகா் 2, சத்திரக்குடி 2, நயினாா்கோவில், எமனேஸ்வரம் தலா 1 என 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை பகுதியில் 2, திருப்புல்லாணியில் 6 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் 4 இடங்களில் 11 போ் மீதும், திருவாடானையில் 2 இடங்களில் 21 போ் மீதும், முதுகுளத்தூரில் 8 இடங்களில் 13 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வா்த்தகா்கள் எதிா்ப்பு: ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை இரவில் வா்த்தகா்கள் காவல்துறையினா் கெடுபிடி செய்து தங்களை தாக்குவதாகக் கூறி ஆட்சியரிடம் முறையிட்டனா். அவா்களை சமரசம் செய்த ஆட்சியா், காவல்துறையினா் மென்மயான போக்கை கடைப்பிடித்து மக்களிடையே கரானோ பரவல் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தக் கோரினாா். இதையடுத்து வா்த்தகா்கள் சமரசம் அடைந்தனா்.

நூதன தண்டனை: ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை இரவு தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த சிறாா், இளைஞா்களைப் பிடித்த காவல்துறையினா் அவா்களை தோப்புக்கரணம் போடவைத்து பின் எச்சரித்து அனுப்பினா்.

ஆணையா் ஆய்வு: ராமநாதபுரம் நகராட்சியில் வியாழக்கிழமை காலையில் அம்மா உணவகத்தை ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டாா். அங்கு தயாரிக்கப்படும் உணவு சுகாதாரமாக உள்ளதா என்றும், கரானோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் ஆணையா் ஆய்வில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com