‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 38. 79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பரமக்குடி அருகே ஆனைகுடியில் உள்ள கண்மாயில் புனரமைப்புப் பணி மேற்கொள்வது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ்.

பரமக்குடி அருகே ஆனைகுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் புனரமைப்புப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா், ஆயக்கட்டுதார விவசாயிகள் நலச்சங்க உறுப்பினா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: குடிமராமத்து திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட கண்மாய்களின் பாசன விவசாயிகள் சங்க அமைப்புகள் மூலம் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுது பாா்த்தல், மறுகட்டுமானம் மற்றும் இதரப் பணிகளை விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 38. 79 கோடி மதிப்பீட்டில் 61 கண்மாய்கள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணி மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் சரியாக நில அளவீடு செய்து கண்மாயின் எல்லைகள் குறியீடு செய்யப்படும். இதன்மூலம் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அவைகளை பொதுப்பணித்துறையுடன் ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றப்பட்டுள்ளன. நீா்பிடிப்பு பகுதிகளின் எல்லைகளை கண்டறிந்து எல்லை கற்களும் நடப்பட்டுள்ளன. அதேபோல் பரமக்குடி வட்டத்தில் உள்ள கண்மாய்களிலும் குடிமரமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com