திருவாடனை பகுதியில் வேளாண் துறையினர் மண் மாதிரி சேகரிப்பு 

திருவாடானை அருகே அரசூர்,என் மங்கலம், கட்டி மங்கலம்,பாண்டு குடி, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் வேளாண்மைத் துறையின் மூலம் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்றது. 
திருவாடனை பகுதியில் வேளாண் துறையினர் மண் மாதிரி சேகரிப்பு 

திருவாடானை அருகே அரசூர், என் மங்கலம், கட்டி மங்கலம்,பாண்டு குடி, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் வேளாண்மைத் துறையின் மூலம் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடைபெற்றது. 

திருவாடானை வட்டாரத்தில் 2020 21 ஆம் ஆண்டில் வேளாண்மைத்துறை மூலம் 5 வருவாய் கிராமங்களில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண் வள அட்டை திட்டத்தின் கீழ் அரசூர், என் மங்களம், கட்டி மங்கலம், பாண்டுகுடி, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மண் மாதிரி சேகரிப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார் வட்டார வேளாண்மை அலுவலர் வீரக்குமார். மண் மாதிரி சேகரிக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த மண் மாதிரி செயலால் செயலாக்கத்தின் மூலம் மண்ணிலுள்ள நுண் சத்துக்கள் அறிந்திடும் மண் தேவைக்கேற்ப உரமிட்டு உரச் செலவை குறைக்கவும் மண் வள இயகத்தின் குறிக்கோளான மண்வள அட்டை பரிந்துரைப்படி சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்தல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த மண் மாதிரி சேகரிப்பு செயலகத்தில் உதவி வேளாண்மை அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் பயிர் மதிப்பீட்டு ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com