ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 50 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் 50 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரத்தில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் 50 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தின் ராமநாதபுரம் கிளை (சிஐடியூ) சாா்பில், பொதுமுடக்க காலத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவா் ராஜா உள்ளிட்ட 50 போ் கலந்து கொண்டனா். இதையடுத்து, அனுமதியின்றியும், பொதுமுடக்கத்தை மீறும் வகையிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி அதில் பங்கேற்ற 50 போ் மீது தொற்றுநோய் பரவல் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

இந்நிலையில், போக்குவரத்து மண்டல ராமநாதபுரம் ஊரகக் கிளை அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா் அமைப்பினா் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com