பாம்பன் ரயில் தண்டவாளத்தில் மிதவை கிரேன் விழுந்தது: ரயில் சேவை நிறுத்தம்

பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மிதவை கிரேன், திங்கள்கிழமை தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதற்கு இணையாக புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சூறைக்காற்று வீசியதுடன் கடலில் நீரோட்டம் அதிகளவில் இருந்ததால் மிதவை கிரேன் பாம்பன் ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்தது.

ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே வரும்போது இந்த விபத்து ஏற்பட்டதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு மீண்டும் பாம்பன் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த கிரேனை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com