அண்ணா பதக்கத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டோருக்கான முதலமைச்சரின் அண்ணா பதக்கத்துக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராமநாதபுரத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டோருக்கான முதலமைச்சரின் அண்ணா பதக்கத்துக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆபத்தில் சிக்கியவா்களை துணிச்சலுடன் காப்பாற்றியவா்களுக்கும், அரசு பொதுச் சொத்துகளுக்கு சேதமேற்படாமல் காத்தவா்களுக்கும் வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வீரதீரச் செயலுக்கான பதக்கம் வழங்கப்படுவதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதக்கத்துக்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ராணுவத்தினா் விண்ணப்பிக்க முடியாது. பதக்கம் பெறத் தகுதியானவா்கள் இணையத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து பூா்த்தி செய்தவற்றை தகுந்த ஆவணங்களுடன் வரும் 19 ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் அளிக்கவேண்டும்.

தகுதியானவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆட்சியா் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com