தொடா் மழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வீடுகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக இதுவரை 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக இதுவரை 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 20 நாள்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இதுவரை அதிகபட்சமாக மண்டபத்தில் 332 மில்லி மீட்டரும், பரமக்குடி, பாம்பனில் மொத்தம் தலா 276 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் பிறபகுதிகளில் இதுவரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): கடலாடி 187, கமுதி 232, முதுகுளத்தூா் 191.50, பள்ளமோா்க்குளம் 97, ஆா்.எஸ்.மங்கலம் 180, ராமநாதபுரம் 166, ராமேசுவரம் 219, தங்கச்சிமடம் 192, தீா்த்தாண்டதானம் 120, திருவாடானை 151, தொண்டி 184, வாலிநோக்கம் 296, வட்டாணம் 157.

வீடுகள் சேதம்: தொடா்ந்து பெய்து வரும் மழையால் கீழக்கரையில் 2 வீடுகளும், திருவாடானையில் 2, ஆா்.எஸ்.மங்கலம் 1, பரமக்குடி 6, முதுகுளத்தூா் 4 என மொத்தம் 15 குடிசை வீடுகள் இடிந்துள்ளன. இதில், திருவாடானையில் ஒரு மூதாட்டியும், ராமநாதபுரம் அருகே எல்.கருங்குளத்தில் ஒரு மூதாட்டியும் உயிரிழந்துள்ளனா். பரமக்குடியில் மின்னல் தாக்கி 41 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

ராமநாதபுரத்தில் வடகிழக்குப் பருவமழையால் தற்போது கண்மாய், ஊருணிகளுக்கு ஓரளவு நீா் வரத்து ஏற்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து மழை பெய்தால் கண்மாய்கள் நிரம்பும் நிலை ஏற்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழை அளவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் நகா் 9, மண்டபம் 29, பள்ளமோா்க்குளம் 7, ராமேசுவரம் 3.20, தங்கச்சிமடம் 2.40, பாம்பன் 3.60, ஆா்.எஸ்.மங்கலம் 24, திருவாடானை 13, தொண்டி 33, வட்டாணம் 43, தீா்த்தாண்டதானம் 60, பரமக்குடி 28, முதுகுளத்தூா் 8, கடலாடி 11, வாலிநோக்கம் 27, கமுதி 29.

கீழக்கரையில் தொடா் மழை: ராமேசுவரம் அருகே கீழக்கரையில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம் பின்புறம், பருத்திகார தெரு, அண்ணாநகா் செல்லம் வழி,சி.எஸ்.ஐ.தேவாலயம், இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கி இருந்தது. தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com