ராமநாதபுரத்தில் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

20% போனஸ் கேட்டு வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள்.

20% போனஸ் கேட்டு வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 20% போனஸ் கேட்டு முற்றுகைப் போராட்டம் நடத்த இன்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான மழை, மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் கே.பச்சமாள் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் குமரவடிவேல், முருகவேல், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அ.சுடலைக்காசி ஆகியோர் பேசினார்கள். இறுதியாக சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி பேசினார். பேசும்போது போனஸ் பெரும்வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும். 24ஆம் தேதி அரைநிர்வாண நாமம் போடும் போராட்டமும், 26.11.2020 மறியல் போராட்டமும், 28.11.2020 பிச்சையெடுக்கும் போராட்டமும் நடத்தப்படும். 

28க்கு பிறகு 100 பேராக தினசரி தொடர் உண்ணாவிரதம், மறியல் என திட்டமிட்டு 20% கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி பேசினார். பொருளாளர் முருகன் நன்றி கூறினார். கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com