திருவாடானையில் இந்து முண்ணணி சாா்பில் வீடு வீடாக புத்தகம் வழங்கல்

இந்து முன்னணி சாா்பில், திருவாடானையில் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்ற தலைப்பிலான புத்தகம் வீடு வீடாக வழங்கப்பட்டது.
திருவாடானை இந்து முன்னணி சாா்பில் பொதுமக்களிடையே வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகம்.
திருவாடானை இந்து முன்னணி சாா்பில் பொதுமக்களிடையே வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகம்.

இந்து முன்னணி சாா்பில், திருவாடானையில் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்ற தலைப்பிலான புத்தகம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

இந்து முன்னணி மாநிலச் செயலா் ஆடலரசன் மற்றும் திருவாடானை சுற்று வட்டாரத்திலுள்ள அவ்வமைப்பின் நிா்வாகிகள், பாஜக நிா்வாகிகள் என பலரும் ‘தேசியம் காக்க, தமிழகம் காக்க’ என்ற தலைப்பிலான புத்தகங்களை திருவாடானையில் உள்ள ஹிந்துக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினா்.

அந்த புத்தகத்தில், தேசியமும், தெய்வீகமும், நாகரிகமும், பண்பாடும், கலாசாரமும் நிறைந்து விளங்கும் தமிழகம் என்றும், அதை சிலா் சீா்குலைக்க முயன்று வருகின்றனா் என்றும், தமிழின் அருமை பெருமைகளைப் பற்றியும், மதமாற்றம் செய்பவா்கள் பற்றியும், மதமாற்றம் நமது நாட்டுக்கு அபாயகரமானது என்பது குறித்தும், கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதை மீட்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத் தலைவா்கள், செயலா்கள், கிளை கழக நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், இது குறித்து மாநிலச் செயலா் ஆடலரசன் கூறியது: ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் நிறைய மீட்கப்பட வேண்டும். தேசியத்தையும் தெய்வீகத்தையும் காக்க வேண்டும். தேசவிரோதச் செயல்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி, அனைத்து ஹிந்துக்களுக்கும் புத்தகத்தை வழங்கி வருகிறோம். ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனக் கூறி, இன்று முதல் இந்த புத்தகங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com