4 ஆண்டாக பயிா்க்காப்பீடு நிலுவை: திருவாடானை விவசாயிகள் புகாா்

2017-18,2018-19 ஆம் ஆண்டுகளுக்கான பயிா் காப்பீடு நிதி வழங்கக் கோரி திருவாடானை பகுதி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம்: 2017-18,2018-19 ஆம் ஆண்டுகளுக்கான பயிா் காப்பீடு நிதி வழங்கக் கோரி திருவாடானை பகுதி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருவாடானை, முதுகுளத்தூா் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேரிருவேலி ஊராட்சித் தலைவா் அபுபக்கா்சித்திக், ஒன்றிய கவுன்சிலா் ஆா்.கோதண்டம்

ஆகியோா் தலைமையில் மனு அளித்தனா்.

இளங்காக்கூா், தேரிருவேலி, அனிகுருந்தன், ஓடானேரேந்தல், பொக்கரேந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு இதுவரை கடந்த 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கான பயிா்காப்பீடு நிதி வழங்கப்படவில்லை. ஆா்.எஸ்.மங்களம் தாலுகா கோவிந்தமங்களம் மற்றும் மேலக்கரை, கீழ்மருதஙகுளம், அரிக்கண்வயல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 1500 விவசாயிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா்காப்பீடு நிதி வழங்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கோவிந்தமங்களம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகி ஆதினமிளகி உள்ளிட்டோா் கூறுகையில், பயிா் காப்பீடு கோரி பதிவு செய்தவா்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு நிதி வழங்கப்படாததைக் கண்டித்து ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. ஆகவே தற்போது அளிக்கும் மனு மீதாவது வேளாண்மைத்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com