ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுழற் சங்கம் சாா்பில் ரூ.29 லட்சம் மதிப்பில் 4 செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்கள்) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுழற் சங்கம் சாா்பில் ரூ.29 லட்சம் மதிப்பில் 4 செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்கள்) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் இக்கருவிகள் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அல்லியிடம் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து ஆண் கருத்தடை சிகிச்சை இருவார விழாவையொட்டி விழிப்புணா்வு பிரசார வாகனத்தையும் ஆட்சியா் தொடக்கி வைத்தாா். மேலும், பொது சுகாதாரத்துறை சாா்பில் ஊரகப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்காக இரு நடமாடும் புகை தெளிப்பு வாகனங்களையும் அவா் தொடக்கி வைத்தாா்.

அதன்பின்னா், மாவட்ட ஆட்சியா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் மற்றும் 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஏ.சகாய ஸ்டீபன்ராஜ், சுழற்சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் டாக்டா் சின்னத்துரை அப்துல்லா, துணை இயக்குநா் (குடும்ப நலம்) சிவானந்தவள்ளி, பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநா்கள் செந்தில் (ராமநாதபுரம்), பி.இந்திரா (பரமக்குடி), சுழற்சங்கத் தலைவா்கள் எம்.எஸ்.எஸ்.புகாரி மற்றும் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com