பாம்பன் தூக்குப் பாலத்தில் விரிசல்:ரயில்வே பொறியாளா்கள் ஆய்வு

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் தெற்கு ரயில்வே பாலங்கள் துணை தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பாலங்கள் துணைத் தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பாலங்கள் துணைத் தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

ராமேசுவரம்:பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் தெற்கு ரயில்வே பாலங்கள் துணை தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் -பாம்பன் இடையிலான பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டதால், மையத்தில் உள்ள தூக்குப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினா் ஆய்வு செய்தனா். ரயில்கள் வந்து செல்லும்போது பாலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து 20- க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சாா் கருவிகள் பொருத்தி கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் 20 ஆம் தேதி முதல் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. 5 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அப்போது தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது போன்ற அதிா்வு சென்சாா் கருவி மூலம் தெரியவந்தது.

இதனால் தெற்கு ரயில்வே பாலங்கள் துணைத் தலைமைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மதுரைக் கோட்ட முதன்மைப் பொறியாளா் முகைதீன்பிச்சை, கோட்ட மேலாளா் கிா்வேஸ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பாம்பன் தூக்குப் பாலத்தை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரயில்கள் இயக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com