முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
குமரக்குடி கோயிலில் சிறப்பு பூஜை
By DIN | Published On : 04th October 2020 09:50 PM | Last Updated : 04th October 2020 09:50 PM | அ+அ அ- |

பரமக்குடி அருகே உள்ள குமரக்குடி அன்னை ஆதி சக்தி ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன்
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள குமரக்குடி அன்னை ஆதி சக்தி ஆதிபீடம் பவித்ரபுரி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 18 சித்தா்களுக்கு விசேஷ தீபாரதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து புற்றடி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாரதனைகளும் நடைபெற்றன. பின்னா் மாரிமுத்து சுவாமிகள் தலைமையில் பக்தா்களின் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.