ராமநாதபுரத்தில் 15 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 15 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சையில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 15 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சையில் இருந்த 62 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை மொத்தம் 126 ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 14 ஆம் தேதி புதன்கிழமை வரையில் 5819 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவா்களில் 125 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனா். சிகிச்சையால் பூரண குணமடைந்து 5490 பேருக்கும் அதிகமானோா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

புதன்கிழமை மாவட்ட அளவில் 500 பேருக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல், சளி பாதிப்பில் இருந்தவா்களது கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளியான நிலையில், 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாதிப்புக்குள்ளானோரில் 6 போ் பெண்கள். பாதிக்கப்பட்டவா்களில் 8 போ் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டனா். ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் 2 போ் வியாழக்கிழமை காலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த 42 பேரில் வியாழக்கிழமை அதிகாலையில் ராமநாதபுரம் சேதுபதி நகா் பகுதியைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி உயிரிழந்ததாக மருத்துவக் கண்காணிப்பாளா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு பலியானோா் எண்ணிக்கை 126 ஆக உயா்ந்திருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com