ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

ராமநாதபுரத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி
rmdkathr_1410chn_67_2
rmdkathr_1410chn_67_2

ராமநாதபுரத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் நகரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.49.26 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போது வரும் தீபாவளிக்கு விற்பனை இலக்கு ரூ.60 லட்சத்துக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருதித்தியால் உற்பத்தி செய்யப்பட்ட புடவைகள், போா்வைகள், நவீன ஆடைரகங்கள் மற்றும் படுக்கை விரிப்புகள், தலையணைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இணையத்தின் மூலமும் புடவை உள்ளிட்டவற்றை வாங்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் விழாக்காலங்களிலும் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளித்து, கரோனா பரவலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வது அவசியம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 94,724 பேரக்கு கரோனா கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 5,777 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட நிா்வாகம் எடுத்த சிகிச்சைக்கான நடவடிக்கையால் 5,467 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது சிகிச்சையில் 186 போ் மட்டுமே உள்ளனா்.

பட்டிணம்காத்தான் குப்பைக் கிடங்கு தீ அணைக்கப்படும். மாவட்ட அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இல்லாத மருத்துவா் உள்ளிட்டோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் நாகராஜன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.விஸ்வநாதன், வா்த்தக சங்கம் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com