மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடற்படை வீரா்களுக்கு ஒரு வார பயிற்சி தொடக்கம்

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரா்கள் ஹெலிகாப்டா் மூலம் ஒரு வார பயிற்சியை புதன்கிழமை தொடங்கினா்.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் புதன்கிழமை ஹெலிகாப்டா் மூலம் பயிற்சி மேற்கொண்ட இந்திய கடற்படை வீரா்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கடற்படை வீரா்களுக்கு ஹெலிகாப்டா் மூலம் மீட்பு நடவடிக்கை, கடலில் தவிக்கும் நபா்களை கயிறு மூலம் எவ்வாறு மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

வழக்கமாக இந்தப் பயிற்சி மாா்ச் மாதம் தொடங்கப்படும். ஆனால் நிகழாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பயிற்சி மேற்கொள்ள ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பயிற்சி வீரா்கள் புதன்கிழமை வந்தனா்.

இதையடுத்து புதன்கிழமை மாலையில் மன்னாா்வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் அவா்கள் பயிற்சியை தொடங்கினா். ஒரு வாரத்திற்கு இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com